தமிழ் மக்களுடைய காணிகளை அபகரித்து கட்டப்பட்டுள்ள திஸ்ஸ விகாரையை அகற்றுமாறி கோரி நாளை பிற்பகல் 4.00 மணிக்கு பாரிய எதிர்ப்பு போராட்டமொன்று இடம்பெறவுள்ளது.
குறித்த போராட்டத்தில் காணிகளை பறிகொடுத்த மக்களும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியினரும் கலந்துக்கொள்ளவுள்ளனர்.
இந்த போராட்டத்தில் தமிழ் தாய்மார்களையும் கலந்துக்கொள்ளுமாறு சட்டத்தரணி சுகாஸ் கனகரட்ணத்தினால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
பூர்வீக நிலத்தின் உரிமையாளர்களாகிய நாம் உரிமங்களுடன் இருக்க, விகாரை நிர்மாணிக்கப்பட்ட நிலப்பரப்பும், அதனை அண்டிய மக்களின் காணி நிலங்களும் விகாரைக்குரியதென்று கூறுவதை ஏற்க முடியாது என தையிட்டி காணி உரிமையாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
