Home இலங்கை சமூகம் தையிட்டி போராட்டக்களத்தில் கைது செய்யப்பட்ட ஐவர்! பதில் நீதவானின் உத்தரவு

தையிட்டி போராட்டக்களத்தில் கைது செய்யப்பட்ட ஐவர்! பதில் நீதவானின் உத்தரவு

0

யாழ். தையிட்டி போராட்டக்களத்தில் கைது செய்யப்பட்ட  வேலன் சுவாமிகள் உள்ளிட்ட  ஐவருக்கும் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளது. 

தையிட்டியில் – திஸ்ஸ விகாரைக்கு எதிராக நடந்த போராட்டத்தின் போது,  வேலன் சுவாமிகள், வலி.கிழக்கு பிரதேச சபை தவிசாளர் தியாகராசா நிரோஷ் உள்ளிட்ட ஐவர் கைது செய்யப்பட்டிருந்தனர். 

மீண்டும் வழக்கு..

கைது செய்யப்பட்ட ஐவரையும் மீட்பதற்காக நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் உள்ளிட்டோர் பலாலி பொலிஸ் நிலையத்திற்கு  சென்று பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருந்தனர். 

இந்தநிலையில், மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தின் பதில் நீதவான் காயத்ரி அகிலனின் வீட்டில் கைது செய்யப்பட்ட குறித்த ஐவரும் முன்னிலைப்படுத்தப்பட்டனர். 

ஒரு இலட்சம் ரூபா பிணையில் இவர்கள் ஐவரும் வெளிச் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், குறித்த வழக்கு எதிர்வரும் ஜனவரி மாதம் 26ஆம் திகதி மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.  

கைது செய்யப்பட்டவர்களுள் வேலன் சுவாமிகள் மற்றும் பிரேத சபை தவிசாளர் தியாகராசா நிரோஷ் தவிர்த்து மூன்று பிரதேச சபை உறுப்பினர்கள் உள்ளடங்குகின்றனர். அவர்களுள் இருவர் ஐக்கிய மக்கள் சக்தி கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 

NO COMMENTS

Exit mobile version