Home இலங்கை அரசியல் ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவை வெளிப்படுத்திய தலதா அத்துகோரள

ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவை வெளிப்படுத்திய தலதா அத்துகோரள

0

Courtesy: Sivaa Mayuri

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு முன்னாள் அமைச்சர் தலதா அத்துகோரள தமது ஆதரவை வெளிப்படுத்தியுள்ளார்.

வெலிமடையில் நடைபெற்ற பேரணியில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் ரணிலுக்கு ஆதரவளிப்பதாக கூறியுள்ளார்.

சஜித் பிரேமதாச மறுப்பு

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தலதா அத்துகோரள, ஐக்கிய தேசியக் கட்சியும் ஐக்கிய மக்கள் சக்தியும் இணைய வேண்டும் என்று கோரி வந்தார்.

எனினும், அதற்கு சஜித் பிரேமதாச உடன்பட மறுப்பதாக குற்றம் சுமத்தி  அவர் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து அண்மையில் விலகினார்.

இந்தநிலையில், அவர் ஐக்கிய தேசிய கட்சியின் செயலாளராக நியமிக்கப்படவுள்ளார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Source: https://tamilwin.com/article/thalada-athukorala-expressed-support-for-ranil-1725805228

NO COMMENTS

Exit mobile version