Home சினிமா தளபதி 69 படப்பிடிப்பு எப்போது துவங்குகிறது! லேட்டஸ்ட் அப்டேட் இதோ

தளபதி 69 படப்பிடிப்பு எப்போது துவங்குகிறது! லேட்டஸ்ட் அப்டேட் இதோ

0

தளபதி 69

நடிகர் விஜய்யின் கடைசி படம் தளபதி 69 என கூறப்பட்டு வருகிறது. அவர் அரசியலில் முழுமையாக இறங்கவுள்ள காரணத்தினால் சினிமாவில் இருந்து விலகப்போகிறார் என சொல்லப்படுகிறது.

தளபதி 69 படத்தை ஹெச். வினோத் இயக்கப்போகிறார் என்றும், இப்படத்தை கே.வி.என் நிறுவனம் தயாரிக்கப்போகிறது என்றும் தகவல் வெளியானது. ஆனால், இதுவரை அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரவில்லை.

அதே போல் இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக சமந்தா நடிக்கப்போகிறார் என்கின்றனர். ஏற்கனவே கத்தி, மெர்சல், தெறி ஆகிய படங்களில் விஜய்யுடன் இணைந்து சமந்தா நடித்திருந்த நிலையில், தளபதி 69 படத்தின் மூலம் 4வது முறையாக விஜய்யுடன் சமந்தா கைகோர்க்கிறார் என பேசப்பட்டு வருகிறது.

லேட்டஸ்ட் அப்டேட்

இந்த நிலையில், தளபதி 69 படத்தின் படப்பிடிப்பு குறித்து வெளிவந்துள்ள தகவலின்படி வருகிற செப்டம்பர் மாதம் முதல் படப்பிடிப்பு துவங்கும் என சொல்லப்படுகிறது. மேலும் இப்படம் அரசியல் கதைக்களத்தில் உருவாகும் என்றும் தெரிவிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Source: https://cineulagam.com/article/thalapathy-69-movie-shooting-update-1720516788

NO COMMENTS

Exit mobile version