Home சினிமா தளபதி 69 படப்பிடிப்பு எப்போது துவங்குகிறது தெரியுமா.. லேட்டஸ்ட் அப்டேட்

தளபதி 69 படப்பிடிப்பு எப்போது துவங்குகிறது தெரியுமா.. லேட்டஸ்ட் அப்டேட்

0

தளபதி 69

நடிகர் விஜய்யின் கடைசி படம் தளபதி 69 குறித்து இதுவரை எந்த ஒரு அறிவிப்பும் வெளிவரவில்லை. இப்படத்தை ஹெச். வினோத் இயக்கப்போகிறார் என கூறப்படுகிறது.

இதற்கான முன் தயாரிப்பு பணிகளில் தான் ஹெச். வினோத் ஈடுபட்டுள்ளாராம். வருகிற ஜூன் 22ஆம் தேதி விஜய்யின் 50வது பிறந்தநாள் அன்று அவருடைய தளபதி 69 படம் குறித்து அறிவிப்பு வெளியாகும் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் இப்படத்திற்காக நடிகர் ரூ. 275 கோடி சம்பளம் வாங்கியிருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது. ஆனால், அது எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை.

படப்பிடிப்பு 

இந்த நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு குறித்து வெளிவந்துள்ள லேட்டஸ்ட் அப்டேட் என்னவென்றால், தளபதி 69 படத்தின் படப்பிடிப்பு வருகிற அக்டோபர் இறுதியில் துவங்கும் என சொல்லப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கின்றனர்.

விஜய் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் GOAT திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் செப்டம்பர் மாதம் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Source: https://cineulagam.com/article/thalapathy-69-shooting-start-update-1718875746

NO COMMENTS

Exit mobile version