Home சினிமா ஐந்து நாட்களில் தங்கலான் திரைப்படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா

ஐந்து நாட்களில் தங்கலான் திரைப்படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா

0

தங்கலான்

இந்த ஆண்டு பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படங்களில் ஒன்று தங்கலான். சீயான் விக்ரம் – பா. ரஞ்சித் முதல் முறையாக கூட்டணி அமைத்ததே, இப்படத்தின் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பை உண்டாக்கியது.

இப்படத்தில் மாளவிகா மோகனன், பார்வதி, பசுபதி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். கேஜிஎப் பின்னணியில் நடந்த இந்த கதை உண்மை சம்பவத்தை மையாக கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. அங்கு வாழ்ந்த மனிதர்களை பற்றி சில புகைப்படங்களை கூட பா. ரஞ்சித் படத்தின் இறுதியில் காட்டினார்.

நேற்று இப்படத்திற்காக வெற்றி விழா கொண்டாடப்பட்ட நிலையில், தங்கலான் 2 குறித்து தகவலும் வெளியாகியுள்ளது. இதனால் ரசிகர்களும் மகிழ்ச்சியில் உள்ளனர். படத்தின் மீது கலவையான விமர்சனங்கள் வைக்கப்பட்டாலும் வசூல் ரீதியாக தங்கலான் பட்டைய கிளப்பி வருகிறது.

ஐந்து நாட்கள் வசூல்

இந்த நிலையில், பாக்ஸ் ஆபிஸில் ஐந்து நாட்களை கடந்துள்ள தங்கலான் திரைப்படம் இதுவரை செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, ஐந்து நாட்களில் உலகளவில் ரூ. 57 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது.

Source: https://cineulagam.com/article/thangalaan-5-days-box-office-collection-1724124211

NO COMMENTS

Exit mobile version