யாழ்.தையிட்டி திஸ்ஸ விகாரை அமைந்துள்ள பகுதி, தேவநம்பியதீஸ மன்னன்
காலத்துப் பௌத்த நிலம். அது சட்டவிரோதமானது அல்ல. விகாரைக்கு உரிய
காணிகளில்தான் தற்போது குடியிருப்புகள் அமைந்துள்ளன என்று இலங்கை பௌத்த காங்கிரஸ், வலிகாமம் வடக்கு பிரதேச சபைத் தவிசாளர்
சோ.சுகிர்தனுக்குக் கடிதம் அனுப்பியுள்ளது.
அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, “வரலாற்றுச் சிறப்புமிக்க திஸ்ஸ விகாரை தேவநம்பியதீஸ மன்னனின் ஆட்சிக்
காலத்தில் அமைக்கப்பட்டதாக அறிய முடிகின்றது. அது பின்னர் பாழடைந்த நிலைக்குச்
சென்றது.
எனினும், அந்த விகாரை 1950ஆம் ஆண்டுகளில் மீளவும் அமைக்கப்பட்டு
1959ஆம் ஆண்டு வரை முறையாகப் பராமரிக்கப்பட்டது.
1980ஆம் ஆண்டுக்குப் பின்னர்
இதற்கும், முன்னைய காலத்தில்
இந்த விகாரை பரந்து விரிந்த பரப்பளவில் அமைந்திருந்தது என்பதற்கும்
நம்பத்தகுந்த ஆதாரங்கள் தற்போதும் உள்ளன.
1958ஆம் ஆண்டு நில அளவைத் திணைக்களம் வெளியிட்ட வரைபடங்களில் 20 ஏக்கர்
பரப்பளவு விகாரைக்காக ஒதுக்கப்பட்டது. விகாரையுடன் பழமையான குளமும் இருந்தது.
தற்போது அந்தக் குளம் கோவில் எல்லைக்கு வெளியே அமைந்துள்ளது.
விகாரை
கைவிடப்பட்ட நிலைக்குச் சென்றதால், 1971ஆம் ஆண்டின் நகர அபிவிருத்தித்
திட்டத்தில் அந்த இடம் கைவிடப்பட்ட விகாரை என்று குறிப்பிடப்பட்டது.
1980ஆம் ஆண்டுக்குப் பின்னர் ஏற்பட்ட போர் காரணமாக, அந்தப் பகுதி மக்கள்
இடம்பெயர்ந்தனர். இதன்போது, விகாரையும் அதைச்சுற்றியுள்ள ஆறாயிரம் ஏக்கர்
நிலப்பரப்பும் உயர் பாதுகாப்பு வலயமாக அறிவிக்கப்பட்டன.
2009ஆம் ஆண்டு போர் நிறைவடைந்த பின்னர், 2018ஆம் ஆண்டு விகாரை நிலம் அடையாளம்
காணப்பட்டு, திஸ்ஸ விகாரை அமைக்கப்பட்டது. இராணுவத்தின் ஒத்துழைப்புடனேயே
கட்டுமானப் பணிகள் இடம்பெற்றன.
அபிவிருத்திப் பணிகள்
2019ஆம் ஆண்டு தொடக்கம் 2025ஆம் ஆண்டுவரை திஸ்ஸ விகாரையில் விரிவான
அபிவிருத்திப் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
2019ஆம் ஆண்டு அப்போதைய
பிரதேசசெயலர் சிவஸ்ரீ விகாரைக் காணிகளில் ஒரு பகுதியை மக்களின்
குடியேற்றத்துக்காக வழங்கினார். இதனால், 2024ஆம் ஆண்டு, நில அளவைத் துறை
மறுமுறை அளவீடு செய்ததில் 14 ஏக்கர் மற்றும் 5.97 பேர்ச் நிலப்பரப்பே
விகாரைக்குச் சொந்தமானது என்று உறுதிப்படுத்தப்பட்டது.
இது 1959ஆம் ஆண்டு குறிக்கப்பட்ட நிலப்பரப்பை விட குறைவாக இருந்தாலும்,
எஞ்சியுள்ள நிலப்பரப்பைப் பாதுகாக்கும் வகையில் தற்போதைய முன்னெடுப்புகள்
மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
சுதந்திரத்துக்குப் பின்னர், வடக்கு மாகாணத்தின் முதலாவது தமிழ்ப் பௌத்த
பாடசாலை திஸ்ஸ விகாரையை அடிப்படையாகக் கொண்டு ஆரம்பிக்கப்பட்டது என்பதைக்
கூறிவைக்க விரும்புகின்றோம்.
தற்போது நூற்றுக்கணக்கான மக்கள் திஸ்ஸ விகாரைக்கு வருவதால், அங்கு
அபிவிருத்திப் பணிகளை மேற்கொள்ள வேண்டிய தேவை உள்ளது.
அந்தப் பணிகளுக்கு
ஒத்துழைப்பு வழங்குமாறு கோருகின்றோம். அத்துடன், ஆக்கிரமிப்பாளர்களிடம்
இருந்து விகாரையைப் பாதுகாத்துத் தருமாறும் கேட்கின்றோம்” என்றுள்ளது.
