Home இலங்கை குற்றம் தொலைபேசியால் சிக்கிக் கொண்ட பெண் மருத்துவர் விவகாரத்தின் சூத்திரதாரி

தொலைபேசியால் சிக்கிக் கொண்ட பெண் மருத்துவர் விவகாரத்தின் சூத்திரதாரி

0

அநுராதபுரம் மருத்துவமனை பெண் மருத்துவர் தவறான முறைக்குட்படுத்தப்பட்ட சம்பவத்தின் சூத்திரதாரி, தொலைபேசி மூலம் கண்காணிக்கப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.

கடந்த ஞாயிறன்று இரவு பெண் மருத்துவரை அவரது விடுதி அறைக்குள் கூர்மையான கத்தியைக் காட்டி அச்சுறுத்தியுள்ளார்.

இதனையடுத்து, கை-கால்களைக் கட்டி வைத்து தவறான முறைக்குட்படுத்தியதன் பின்னர் அவரது தொலைபேசியைத் திருடிக் கொண்டு சந்தேக நபர் தப்பியோடியுள்ளார்.

  

சந்தேகநபர் கைது 

பாதிக்கப்பட்ட பெண் மருத்துவர் அளித்த புகாரின் ​பேரில் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபரின் நடமாட்டங்களை, மருத்துவரின் திருடப்பட்ட தொலைபேசி மூலம் பொலிஸார் கண்காணித்துள்ளனர்.   

அதன் மூலமாக நேற்று(12.03.2025) காலை சந்தேகநபரை கல்னேவ பிரதேசத்தில் வைத்துக் கைது செய்துள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர்.  

NO COMMENTS

Exit mobile version