Home இலங்கை சமூகம் இளைய தலைமுறையினரை மலினப்படுத்தும் இராணுவம்: எழுந்துள்ள விமர்சனம்

இளைய தலைமுறையினரை மலினப்படுத்தும் இராணுவம்: எழுந்துள்ள விமர்சனம்

0

Courtesy: Thevanathan

இளைய தலைமுறையினரை மலினப்படுத்தும்
செயற்பாட்டை இராணுவம் உடனடியாக நிறுத்த வேண்டும் என கரைச்சி
பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் அருணாச்சலம் வேழமாலிகிதன் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சியில் நேற்று(10.02.2025) நடாத்திய ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்,

“கிளிநொச்சி வளாகத்தில் இலவச இணைய வசதியினை ஏற்படுத்தி அங்கு இளைஞர்
யுவதிகள் மத்தியில் கலாசார சீரழிவை நாங்கள் பார்க்க முடிகின்றது.

பண்பாட்டு சீரழிவு

முன்பு வங்கி
ஒன்றிற்கு பின்புறத்தில்
காமினி நிலையம் என்ற பெயரில் அங்கும் பண்பாட்டு சீரழிவு
இடம்பெற்றது. அது இப்பொழுது மூடப்பட்டுள்ளது.

இராணுவம் தேசிய பாதுகாப்பை முன்னெடுக்காமல் பூங்கா, சிகையலங்கார நிலையம் மற்றும் உணவகங்களை நிர்வகிக்கின்றது” எனத் தெரிவித்துள்ளார். 

NO COMMENTS

Exit mobile version