Home இலங்கை அரசியல் தமிழரசுக் கட்சியால் இழைக்கப்பட்ட துரோகம்! ஆதங்கத்தில் கஜேந்திரகுமார்

தமிழரசுக் கட்சியால் இழைக்கப்பட்ட துரோகம்! ஆதங்கத்தில் கஜேந்திரகுமார்

0

செம்மணியில் நடந்த அநியாயங்களை தற்போது வெளிக்கொண்டுவந்த நிலையில் மீளவும் ஆதாரங்களை மூடி மறைக்கின்ற அதே அரசாங்கத்திடம் இந்த விவகாரத்தை ஒப்படைப்பது வருத்தத்திற்குரியது என நாடாளுமன்ற உறுப்பினர்
கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

யாழில் நேற்று(13) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் ஆணையாளர் கடந்த வாரம் இலங்கைக்கு
வருகை தந்த போது தமிழ் தேசிய கட்சிகளின் தலைவர்கள் மற்றும் சிவில் சமூக
தலைவர்கள் செயற்பாட்டாளர்களின் ஒப்புதலோடு ஒரு கடிதத்தை ஐக்கிய நாடுகள் மனித
உரிமை ஆணையாளரிடம் வழங்கினோம்.

அந்த கடிதத்தில் இலங்கை தமிழ் அரசுக் கட்சியின்
தலைவரும்
கையொப்பமிட்டனர்.

அந்த கடிதம் வழங்கி அடுத்த வாரமே இலங்கை தமிழ் அரசுக் கட்சி தலைவரும்
பொதுச்செயலாளரும் செம்மணி விவகாரத்தில் இலங்கை
அரசாங்கத்திடம் அந்த விசாரணை நடத்துவதற்குரிய அங்கீகாரத்தை கூறி அதற்கு
மேலதிகமாக ஒரு சில சர்வதேச தரப்புகளின் கண்காணிப்போடு செய்வதற்குரிய
ஆலோசனைகளையும் வழங்கி இருக்கிறார்கள்.

இந்தநிலைமையானது
நேருக்கு நேர் முரண்பட்ட நிலைப்பாடு ஆகும் என்று குறிப்பிட்டுள்ளார்.

இதுதொடர்பில் மேலும் தெரிவிக்கையில்…..

NO COMMENTS

Exit mobile version