எல்ல-வெல்லவாய வீதியில் ஏற்பட்ட விபத்து தொடர்பான ஆரம்ப விசாரணைகளில் பேருந்தில் இயந்திரக் கோளாறு இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடக பேச்சாளர் எஃப்.யு. வுட்லர் தெரிவித்துள்ளார்.
மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தை சேர்ந்த நிபுணர் ஒருவர் பேருந்தின் சிதைவுகளை ஆய்வு செய்து, அதை உறுதிப்படுத்தும் அறிக்கையை சமர்ப்பித்ததாக அவர் கூறியுள்ளார்.
இருப்பினும், விபத்துக்கான சரியான காரணத்தை கண்டறிய மேலும் விசாரணைகள் நடைபெற்று வருவதாக ஊடக பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.
பேருந்தின் சிதைவுகள்
அதன்படி, பள்ளத்தாக்கில் கவிழ்ந்த பேருந்தின் சிதைவுகள் மீட்கப்பட்டு நாளை மேலதிக பரிசோதனைக்காக அரசு ஆய்வாளரிடம் ஒப்படைக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
குறித்த விபத்தில் 15 பேர் உயிரிழந்தது பலர் காயமடைந்த நிலையில், இந்த துயரச் சம்பவம் குறித்து அதிகாரிகள் முழுமையான விசாரணையைத் தொடங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
