Home இலங்கை சமூகம் இலங்கையில் தற்போது உள்ள புற்றுநோயாளர்களின் எண்ணிக்கை

இலங்கையில் தற்போது உள்ள புற்றுநோயாளர்களின் எண்ணிக்கை

0

இலங்கையில் தற்போது 3,300 வாய் புற்றுநோயாளர்கள் பதிவாகியுள்ளதாக பல் அறுவை
சிகிச்சை நிபுணர் வைத்தியர் பிரசன்ன ஜயசேகர தெரிவித்துள்ளார்.

புகைபிடித்தல், வெற்றிலை மெல்லுதல் மற்றும் மது அருந்துதல் போன்ற பழக்கங்களால்
வாய் புற்றுநோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும் அவர்
குறிப்பிட்டுள்ளார்.

20 முதல் 30 வயதுக்குட்பட்ட இளைஞர்களிடையே வாய் புற்றுநோய் நோய்கள் அதிகரித்து
வருவதாகவும், இது கவலைக்கிடமான விடயமாக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

அசாதாரண அறிகுறிகள்

நாளாந்தம் சுமார் 10 புதிய நோயாளர்கள் கண்டறியப்படுகின்றனர் எனவும் இதில் 15%
ஆண்கள் மற்றும் 3% பெண்கள் எனக் கண்டறியப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையை எதிர்கொள்வதற்காக, சுகாதார அமைச்சு பொதுமக்களுக்கு விழிப்புணர்வை
ஏற்படுத்தும் பிரச்சாரங்களை முன்னெடுத்து வருகிறது.

மேலும், மக்கள் பல் பரிசோதனைகளை முறையாக மேற்கொண்டு, ஏதேனும் அசாதாரண
அறிகுறிகள் இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டுமெனவும்
வலியுறுத்தப்படுகின்றது. 

NO COMMENTS

Exit mobile version