Home இலங்கை கல்வி தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சை வினாத்தாளில் தகாத வார்த்தை

தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சை வினாத்தாளில் தகாத வார்த்தை

0

அனுராதபுரம் கல்வி வலயத்தில் தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கான முன்னோடி வினாத்தாள் ஒன்றில் எழுத்துப் பிழையினால் தகாத வார்த்தை அச்சிடப்பட்டிருந்தது என தெரிவிக்கப்படுகின்றது.

இந்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த 22ம் திகதி இந்த வினாத்தாள் மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

இந்த எழுத்து மற்றும் அச்சுப் பிழையினால் தாமும் மாணவ மாணவியரும் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்க நேரிட்டதாக ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.

மாணவர்கள் மத்தியில் குழப்ப நிலை 

அனுராதபுரம் வலயக் கல்வி காரியாலயத்தினால் இந்த பரீட்சை வினாத்தாள் தயாரிக்கப்பட்டுள்ளது.

இந்த வினாத்தாளை பெற்றுக்கொண்ட அதிபர்கள் தங்களது பாடசாலைகளில் பரீட்சையை நடாத்தியுள்ளனர்.

பரீட்சையின் போது மாணவர்கள் மத்தியில் குழப்ப நிலை ஏற்பட்டதாகவும் இது குறித்து தேடிப் பார்த்த போது வினாத்தாளில் தவறுதலாக தகாத வார்த்தை அச்சிடப்பட்டிருந்தமை கண்டறியப்பட்டுள்ளது.

இது குறித்து அதிபர்கள் வலயக் கல்விக் காரியாலயத்திற்கு அறிவித்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து திருத்தி அமைக்கப்பட்ட புதிய வினாத்தாள்களை வழங்குவதற்குநடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்தப்படும் என மாகாண கல்வித் திணைக்களம் அறிவித்துள்ளது. 

NO COMMENTS

Exit mobile version