Home இலங்கை கல்வி மூன்றாம் தவணைப் பரீட்சை : கல்வி அமைச்சின் முக்கிய அறிவிப்பு

மூன்றாம் தவணைப் பரீட்சை : கல்வி அமைச்சின் முக்கிய அறிவிப்பு

0

2025ஆம் கல்வி ஆண்டின் மூன்றாம் பாடசாலைத் தவணைக்காக தவணைப் பரீட்சைகளை நடத்த வேண்டாம் என வெளியிடப்பட்டுள்ள அறிவுறுத்தல்களை கட்டாயம் நடைமுறைப்படுத்த வேண்டும் என கல்வி அமைச்சு  (MOE) தெரிவித்துள்ளது.

அதன்படி, 6 ஆம் தரம் முதல் 10 ஆம் தரம் வரையான மாணவர்களுக்கான மூன்றாம் தவணை பரீட்சைகளை நடத்த வேண்டாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சம்பந்தப்பட்ட அதிகாரிகள், குறிப்பாக அனைத்துப் பாடசாலை அதிபர்களும் இந்த அறிவுறுத்தலை கட்டாயமாக நடைமுறைப்படுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

நாட்டில் ஏற்பட்ட அனர்த்தங்கள்

கடந்த சில நாட்களுக்கு முன்னர் நாட்டில் ஏற்பட்ட அனர்த்தங்கள் காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

இந்தநிலையில் மாணவர்களை அடுத்த தரங்களுக்கு உயர்த்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், 11ஆம் தர மாணவர்களுக்கான மூன்றாம் தவணை பரீட்சையை நடத்த முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version