நாயாறு படகு சேவைக்கான அனைத்து ஏற்பாடுகளும் ஏற்கனவே மேற்கொள்ளப்பட்டுள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது.
எனினும், முகத்துவார பகுதியில் அதிக அலை (High Tide) அல்லது அதிக நீரோட்டம்
ஏற்பட்டால்,படகு சேவையில் தாமதம் ஏற்படும் வாய்ப்பு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பு நிலைமை தொடர்பில் கண்காணிப்பு
கடற்படை (Navy) நீர்மட்டம், அலைகள் மற்றும் பாதுகாப்பு நிலையை தொடர்ந்து
கண்காணித்து வருகின்றது.
பாதுகாப்பான சூழ்நிலை உறுதி செய்யப்பட்டால் மட்டுமே படகு சேவை இயக்கப்படும் எனவும், அவசரமாக செல்ல வேண்டியவர்கள் மற்றும் குறிப்பாக மோட்டார் சைக்கிள்
பயன்படுத்துவோர் நெடுங்கேணி வழியை பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்படுகின்றார்கள்.
எனவே பொதுமக்கள் தயவு செய்து அமைதியாக காத்திருக்குமாறும், நிலைமை சீராகும்
பட்சத்தில், நாயாறு வழியாக படகு சேவை வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
