ஊவா மாகாணத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளையும் இம்மாதம் 29 ஆம் திகதி திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் நாலக களுவெவ தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று (16) நடைபெற்ற கலந்துரையாடலில் பங்கேற்று கருத்து தெரிவிக்கும் போதே இதனை குறிப்பிட்டுள்ளார்.
பாடசாலைகள் திறக்கப்படாமைக்கான காரணம்
மேலும், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பாடசாலைகள் திறக்கப்படாததற்கு போக்குவரத்து சிரமங்கள் மற்றும் நிவாரண முகாம்களின் செயல்பாடுகள் முக்கிய காரணம் என்று கூறியுள்ளார்.
இந்த நிகழ்வில் கருத்து தெரிவித்த, பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சுபாஷினி இந்திகா குமாரி லியனகே ஒத்திவைக்கப்பட்ட உயர்தரப் பரீட்சைகளை 7 நாட்களுக்கு நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
2026 ஆம் ஆண்டு ஜனவரி 12 ஆம் திகதி முதல் 20 ஆம் திகதி வரை நடைபெறும் பரீட்சையில்,குறிப்பிட்ட பாட வினாத்தாளின் 2 ஆம் பகுதியில் இருக்கும் 5 வினாக்களும் முதல் வினாத்தாளுக்கு விடை எழுதவும்.
வரலாற்று பாடம் மற்றும் நடைபெறுவதால் வினாத்தாள் 1 மற்றும் 2 ஆம் பகுதிகளில் இருக்கும் அனைத்து வினாத்தாள்களுக்கும் அந்த காலப்பகுதியில் நடத்தப்படவுள்ளது என பரீட்சைகள் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.
மாற்று பரீட்சை மையங்கள்
202,627 மாணவர்கள் பரீட்சைக்குத் தோற்றவுள்ளதாகவும், நிலவும் பேரிடர் சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு வேறு பரீட்சை மையங்கள் தேவைப்பட்டால், பரீட்சைகள் திணைக்களத்திற்கு பாடசாலை அதிபர்கள் மூலம் தெரிவிக்க முடியும் என்றும் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், தனியார் பரீட்சாத்திகள் நேரடியாக 1911 அல்லது 0112 784 208, 0112 784 537 அல்லது 0112 788 616 என்ற எண்களுக்கு அழைத்து வேறு பரீட்சை மையத்தைக் கோரலாம் என்று பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் கூறியுள்ளார்.
