Home இலங்கை பொருளாதாரம் வருமான வரிக்கணக்கை சமர்ப்பிக்கும் காலக்கெடு முடிவடைகிறது

வருமான வரிக்கணக்கை சமர்ப்பிக்கும் காலக்கெடு முடிவடைகிறது

0

Courtesy: Sivaa Mayuri

2023-24 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான வரிக் கணக்கைச் சமர்ப்பிப்பதற்கான காலக்கெடு இன்று நவம்பர் 30ஆம் திகதியுடன் முடிவடைகிறது.

இந்தநிலையில், வருமான வரி அறிக்கைகள் அதன் இணைய அமைப்பு மூலம் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும் என்று உள்நாட்டு இறைவரித்திணைக்களம் தெரிவித்துள்ளது.

தொழில்நுட்ப ஆதரவு தேவைப்படுபவர்கள் தலைமை அலுவலகம் மற்றும் பிராந்திய மற்றும் நகர அலுவலகங்களில் இருந்து தேவையான உதவியைப் பெறலாம் என்றும் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இலங்கை வங்கிக் கிளை

அத்துடன், உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் தலைமை அலுவலகம் மற்றும் ஜாவத்தை அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள இலங்கை வங்கிக் கிளையும் வருமான வரி செலுத்துவதற்காக திறந்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

NO COMMENTS

Exit mobile version