கஞ்சிபானி இம்ரான் நாட்டைவிட்டு தப்பிச் செல்வதற்கு பிரதி பொலிஸ் மா அதிபர் ஒருவர் உதவி செய்துள்ளதாக குற்றம் மற்றும் சாட்சிகளின் பாதிக்கப்பட்டவர்களைப் பாதுகாப்பதற்கான தேசிய அதிகார சபையின் பாதுகாப்பில் இருக்கும் மகேஷா என்பவர் தெரிவித்துள்ளார்.
இணையத்தளத்திற்கு வழங்கிய செவ்வியில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இந்தியாவுக்கு படகு மூலம் தப்பிச் சென்ற
இவர் பலமுறை ஊடகங்களில் போதை பொருள் கடத்தல் மற்றும் குற்றவாளிகள் தொடர்பில் பல உண்மையான கருத்துக்களை தெரிவித்துள்ளார். தொடர்ந்து பேசிய அவர்,
கஞ்சிபானி இம்ரான் இந்தியாவுக்கு தப்பிச் செல்வதற்கு அவரே அனைத்து உதவிகளையும் செய்துள்ளார்.அவர் இன்றும் பிரதி பொலிஸ் மா அதிபராக கடமையாற்றி வருகிறார்.
அவரின் பெயரை குறிப்பிட முடியாது என்றும் தெரிவித்தார்.
இந்தியாவுக்கு படகு மூலம் தப்பிச் சென்ற கஞ்சிபானி இம்ரான் வேறொரு நாட்டுக்கு சென்று விட்டதாகவும் தெரியவந்தமை குறிப்பிடத்தக்கது.