Home இலங்கை அரசியல் பொருளாதார நெருக்கடியில் சிக்கபோகும் இலங்கை! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

பொருளாதார நெருக்கடியில் சிக்கபோகும் இலங்கை! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

0

இந்த ஆண்டு ஓகஸ்ட் மாத முடிவில் நாட்டில் பெரும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு அடுத்த ஆண்டின் முதல் காலப்பகுதியில் அது உக்கிரமடைய கூடும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

அத்தோடு இந்த நாட்டை பொருளாதாரத்தினால் மட்டுமே மீளமைக்க முடியும் என்றும் அவர் கூறியுள்ளார்.

இதன்படி வேறு எந்த விதத்திலும் இதனை மாற்றியமைக்க முடியாது என கூறிய அவர்,  இந்த அரசிடம் காத்திரமான திட்டங்கள் இல்லாததால் ஊழல் ஒழிப்பு மற்றும் இதர காரணிகளை முன்னிலைப்படுத்துகின்றது எனவும் கூறியுள்ளார்.

பொருளாதாரத் திட்டம்

மேலும், தற்போதைய அரசாங்கத்திடம் பொருளாதாரத் திட்டம் இல்லாததால், எதிர்காலத்தில் நாடு மீண்டும் ஒரு பெரிய பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ளும் என்றும் தெரிவித்துள்ளார்.

நாம் ஊழலைக் கட்டுப்படுத்த வேண்டும். ஆனால் நாட்டின் உயிர்வாழ்வு பொருளாதாரத்தால் தீர்மானிக்கப்படுகிறது எனவும் தெரிவித்துள்ளார்.

NO COMMENTS

Exit mobile version