Home இலங்கை சமூகம் இலங்கை தொடர்பான மனித உரிமை ஆணைக்குழுவின் அறிக்கை : ஐரோப்பிய ஒன்றியத்தின் நிலைப்பாடு

இலங்கை தொடர்பான மனித உரிமை ஆணைக்குழுவின் அறிக்கை : ஐரோப்பிய ஒன்றியத்தின் நிலைப்பாடு

0

இலங்கை (Sri Lanka) தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் (OHCHR) முன்வைக்கப்பட்ட அறிக்கையை ஐரோப்பிய ஒன்றியம் (European Union) ஏற்றுக்கொள்வதாக தெரிவித்துள்ளது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் ஐரோப்பிய ஒன்றியம் நேற்று (09) தமது நிலைப்பாட்டை அறிவித்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

சுவிட்சர்லாந்தின் ஜெனிவாவில் (Geneva) ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 57ஆவது கூட்டத்தொடர் நேற்று (09) ஆரம்பமாகியுள்ளது.

இலங்கை தொடர்பான அறிக்கை

இந்தக் கூட்டத்தில் இலங்கை தொடர்பில் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தினால் தயாரிக்கப்பட்ட அறிக்கை தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.

இதேவேளை குறித்த அறிக்கையின் மூலம் சுட்டிக்காட்டப்பட்டுள்ள உண்மைகளை ஏற்றுக்கொள்வதாகவும், இலங்கையின் நல்லிணக்க செயற்பாடுகள் தொடர்பில் அவதானம் செலுத்தி வருவதாகவும் ஐரோப்பிய ஒன்றியம் சுட்டிக்காட்டியுள்ளது.

பிரித்தானியா வேண்டுகோள் 

இந்த நிலையில் இது தொடர்பான அறிக்கை குறித்து பிரித்தானியாவும் (UK) நேற்று (09) அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அந்த அறிக்கையின்படி, இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் சுயாதீன விசாரணை நடத்தப்பட வேண்டுமென பிரித்தானியா வேண்டுகோள் விடுத்துள்ளது.

மேலும், கனடா (Canada), மலாவி (Malawi) , மொண்டெனேகுரோ (Montenegro), வடக்கு மெசிடோனியா (North Macedonia), அமெரிக்கா (US) ஆகிய நாடுகளின் தலைமையிலான குழுவும் இலங்கையின் மனித உரிமைகள் தொடர்பில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version