Home இலங்கை சமூகம் ஐ.பி.சி தமிழ் தயாரிக்கும் மில்லர்!! தலைப்பு குறித்த சர்ச்சைகளை உடைத்தெறிந்த படக்குழு

ஐ.பி.சி தமிழ் தயாரிக்கும் மில்லர்!! தலைப்பு குறித்த சர்ச்சைகளை உடைத்தெறிந்த படக்குழு

0

ஐ.பி.சி தமிழ் தயாரிப்பில் உருவாக்கப்படும் ‘மில்லர்’ திரைப்படத்தின் ஆரம்ப விழா அண்மையில் தென்னிந்திய பிரபலங்களின் பங்கேற்புடன் சிறப்பாக இடம்பெற்றிருந்தது.

ஈழத்தமிழ் மக்கள் தாண்டி, சர்வதேச ஊடக துறையிலும் ஐபிசி தமிழின் வெற்றி ஈடு செய்ய முடியாதது.

அந்த வகையில், தற்போது இலங்கையின் தமிழ் திரைத்துறையில் தனக்கென ஒரு அடையாளத்தை பதிக்கும் வெற்றி ஓட்டத்தை ஐபிசி தமிழ் நிறுவனம் ஆரம்பித்து இலக்கு நோக்கி பயணிக்கிறது.

இந்த நிலையில், ஐ.பி.சி தமிழ் ஊடக நிறுவனத்தின் பாஸ்கரன் கந்தையா தயாரிப்பில் ராஜ் சிவராஜ் பூவன் மதீசன் ஆகியோரது கூட்டு இயக்கத்தில் வெளிவரவிருக்கும் மில்லர் திரைப்படம் ஈழ சினிமாவில் புதிய திருப்புமுனைக்கான முயற்சியாக எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.

இவ்வாறானதொரு பின்னணியில், அதற்கு அங்கொன்றும் இங்கொன்றுமான விமர்சனங்கள் கிளம்பியுள்ளதையடுத்து, மில்லர் திரைப்படக்குழு அவற்றுக்கு தெளிவான விளக்கத்தையும் தங்களின் பலவருட பயணங்கள் குறித்த அனுபவங்களையும் இவ்வாறு பகிர்ந்துக் கொண்டுள்ளனர்.   

https://www.youtube.com/embed/ewcmXfIY1Ak

NO COMMENTS

Exit mobile version