Home இலங்கை அரசியல் கடந்த கால ஆட்சியாளர்களின் பிரதியாக காணப்படும் அநுர : கஜேந்திரகுமார் சாடல்

கடந்த கால ஆட்சியாளர்களின் பிரதியாக காணப்படும் அநுர : கஜேந்திரகுமார் சாடல்

0

கடந்த கால ஆட்சியாளர்களைப் போலவே பொதுமக்களின் பிரச்சனைகளை அநுர (Anura Kumara Dissanayake) அரசு கண்டுகொள்ளவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் (Gajendrakumar Ponnambalam) தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் நேற்றைய தினம் (21.03.2025) குழுநிலை விவாதத்தில் கருத்துரைத்த போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும், த பினேன்ஸ் என்ற நிதி நிறுவனத்தில் பணத்தை வைப்பிலிட்ட மக்களுக்கு உரியத் தீர்வு வழங்கப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வலியுறுத்தியுள்ளார். 

மூடப்பட்ட த பினேன்ஸ் நிறுவனத்தில் பணத்தை வைப்பிலிட்ட மக்களுக்கு இதுவரையில் தீர்வு வழங்கப்படவில்லை எனச் சுட்டிக்காட்டியுள்ளார். 

குறித்த நிறுவனம், மூடப்படுவதற்கு இரண்டு வாரங்களுக்கு முன்னரும் அந்த நிறுவனத்தினால் சுமார் ஆயிரம் மில்லியன் ரூபாய் நிதி திரட்டப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார். 

அத்துடன் த பினேன்ஸ் நிறுவனத்தின் சொத்துக்களை ஏலத்தில் விற்பனை செய்வதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ள நிலையில், தற்போதைய மதிப்பீட்டை விடவும் குறைந்த அளவில் அவை விற்பனை செய்யப்படுவதாக அந்த மக்களுக்குச் சந்தேகம் நிலவுகிறது எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான மேலதிக விடயங்களை கீழ் உள்ள காணொளியை காண்க…

https://www.youtube.com/embed/dVZpl2C0SOQ

NO COMMENTS

Exit mobile version