Home உலகம் இத்தாலிய பிரதமரின் உயரத்தை விமர்சித்த பத்திரிகையாளர்: நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

இத்தாலிய பிரதமரின் உயரத்தை விமர்சித்த பத்திரிகையாளர்: நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

0

இத்தாலிய பிரதமர் ஜார்ஜியா மெலோனியை (Giorgia Meloni) கேலி செய்த பத்திரிகையாளருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இத்தாலியில் உள்ள மிலன் நீதிமன்றம், பிரதமர் ஜார்ஜியா மெலோனியை கேலி செய்த பத்திரிகையாளருக்கு 5,000 யூரோக்கள் ( இலங்கை பணமதிப்பில் சுமார் ரூ. 16,52,000) அபராதம் விதித்துள்ளது.  

இத்தாலியில் (Italy) சுயாதீன பத்திரிகையாளராக செயல்பட்டு வரும் கோர்டீஸே (Cortese) தனது எக்ஸ் பக்கத்தில் தற்போதைய பிரதமர் மெலோனியின்  பின்னணியில் இத்தாலிய சர்வாதிகாரி பெனிட்டோ முசோலினி இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு மெலோனியின் உயரம் குறித்து விமர்சிக்கும் வகையில் பதிவிட்டிருந்தார்.

ஊடக சுதந்திரம்

குறித்த பதிவில் “நீ என்னை பயமுறுத்த முடியாது,மெலோனி.. நீ வெறும் 1.2 மீட்டர் உயரம்தான். என்னால் உன்னை பார்க்க கூட முடியவில்லை” என்றும் கோர்ட்டிஸே எக்ஸ் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் இருவருக்குமிடையில் சமூக வலைதளத்தில் வாக்குவாதம் முற்றிய நிலையில் மெலோனி கோர்டீஸே மீது நீதிமன்றத்தில் உருவ கேலி வழக்கு தொடுத்திருந்தார்.

தற்போது இந்த தீர்ப்பு குறித்து பேசியுள்ள கோர்டீஸே,’கருத்து சுதந்திரம் மற்றும் ஊடக சுதந்திரத்துக்கு எதிராக தீவிர பிரச்னையை இத்தாலி அரசு கொண்டுள்ளது.

இது சுயாதீன பத்திரிகையாளர்களுக்கு கடுமையான காலம். வரும் காலத்தில் சிறந்த நாட்களுக்காக நாம் காத்திருப்போம். நாங்கள் மனம் தளரப் போவதில்லை’ என்று தெரிவித்துள்ளார்.

NO COMMENTS

Exit mobile version