வரலாற்றுச் சிறப்புமிக்க கண்டி(kandy) ஸ்ரீ தலதா பெரஹரவை அடையாளப்படுத்தும் வகையில் தபால் திணைக்களத்தினால் வெளியிடப்பட்ட உலகிலேயே மிக நீளமான 205 மில்லிமீற்றர் கொண்ட நினைவு முத்திரை, சிரேஷ்ட பிரதி தபால் மா அதிபர் ராஜித கே. ரணசிங்கவினால்(Ranasinghe) நேற்று (20ஆம் திகதி) ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம்(ranil wickremesinghe) கையளிக்கப்பட்டது.
கண்டி எசல பெரஹரா திருவிழாவின் நிறைவை முன்னிட்டு கண்டி ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்ற வைபவத்தில் இந்த முத்திரை வெளியிடப்பட்டது.
பௌத்த கலாசாரம் தொடர்பாக உருவாக்கப்பட்ட முத்திரைகள்
மேலும் இங்கு, ஸ்ரீ தலதா மாளிகை மற்றும் பௌத்த கலாசாரம் தொடர்பாக உருவாக்கப்பட்ட முத்திரைகள், நினைவுப் பொருட்கள் மற்றும் முதல் நாள் அட்டைகளின் தொகுப்பு ஸ்ரீ தலதா மாளிகை அருங்காட்சியகத்தில் வைப்பதற்காக தியவதன நிலமேயிடம் வழங்கப்பட்டது.
ரணில் அளித்த உறுதிமொழி
கண்டியின் வரலாற்று சிறப்புமிக்க ஸ்ரீ தலதா பெரஹராவை தெற்காசியாவின் மிக உயரிய சமய விழாவாக உலகிற்கு எடுத்துச் செல்ல முழு அரசாங்க ஆதரவு வழங்கப்படும் என விழா சபையில் உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.