Home இலங்கை சமூகம் 15 வருடங்களின் பின் வெளிவந்த விடுதலைப் புலிகள் அமைப்பின் Iron Safe Box

15 வருடங்களின் பின் வெளிவந்த விடுதலைப் புலிகள் அமைப்பின் Iron Safe Box

0

தமிழீழ விடுதலைப் புலிகள் (LTTE) அமைப்பு யுத்த காலத்தில் பயன்படுத்திய நிலத்தடி பதுங்கு குழிகள் பற்றிய தகவல்கள், அவர்களின் மூலோபாய ரீதியான போர் தந்திரங்களில் ஒரு முக்கிய அம்சமாக இருந்துள்ளன.

இந்த பதுங்கு குழிகள், தாக்குதல்களில் இருந்து தப்பிப்பதற்கும், தலைவர்கள் மற்றும் போராளிகளை பாதுகாப்பதற்கும், ஆயுதங்கள் அல்லது பொருட்களை மறைத்து வைப்பதற்கும் பயன்படுத்தப்பட்டன.

மேலும், ஈழப் போரின் இறுதிக்கட்டத்தில், பதுங்கு குழிகள் பொதுமக்கள் மற்றும் போராளிகளின் உயிரைக் காப்பாற்றுவதற்கு பயன்படுத்தப்பட்டுள்ளன.

இதற்கமைய மந்துவில் கிராமத்தில், விடுதலைப் புலிகளின் தலைவர் மற்றும் தளபதிகள் பயன்படுத்தியதாக கருதப்படும் 20 அடி ஆழமுள்ள நிலத்தடி பதுங்கு குழி ஒன்று கண்டறியப்பட்டு, புதுக்குடியிருப்பு பொலிஸாரால் அண்மையில் தோண்டப்பட்டது.

இதில் ஆயுதங்கள் அல்லது தங்கம் புதைக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டது.

எனினும் சிறிலங்கா பாதுகாப்பு தரப்பு குறித்த பிரதேசத்தை அடையாளம் இட்டு மேற்கொள்ளப்பட்ட சில முக்கிய பணிகளை எமது ஐ.பி.சி தமிழ் ஊடகத்தின் கள ஆய்வு தொடரும் காணொளியில் வெளிக்கொண்டுவந்துள்ளது.

இந்த பதுங்கு குழிகள் பொதுவாக ஆழமாக (சில இடங்களில் 20-35 அடி ஆழம்) தோண்டப்பட்டு, மேற்பரப்பில் கொங்கிரீட் அல்லது பிற உறுதியான பொருட்களால் மூடப்பட்டிருந்ததாகவும், இதனை ஆய்வு செய்த இராணுவத்தின் செயற்பாடுகள் குறித்தும் பிரதேச மக்கள் கூறும் கருத்துக்கள் பின்வருமாறு அமைந்திருந்தது…

https://www.youtube.com/embed/vnfn-kYzmR4

NO COMMENTS

Exit mobile version