Home இலங்கை அரசியல் நகர குடியிருப்பு அபிவிருத்தி அதிகார சபைக்கு புதிய தலைவர்

நகர குடியிருப்பு அபிவிருத்தி அதிகார சபைக்கு புதிய தலைவர்

0

நகர குடியிருப்பு அபிவிருத்தி அதிகார சபையின் புதிய தலைவராக அசங்க அபேவர்தன (Asanga Abeywardena) தனது கடமையை பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார்.

குறித்த நியமனமானது இன்றையதினம் (18.10.2024) கிராமிய, நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சர் விஜித ஹேரத்தினால் (Vijitha Herath) வழங்கப்பட்டுள்ளது.

நகர குடியிருப்பு

திருகோணமலை (Trincomalee) மாவட்ட ஆளுநராகவும், அம்பாறை (Ampara) மாவட்ட மேலதிக ஆளுநராகவும் கடமையாற்றிய இவர், அரச நிர்வாக சேவையில் வினைத்திறன்மிக்க அதிகாரியாக 30 வருடங்களுக்கு மேலாக பொது சேவைகளுக்காக தன்னை அர்ப்பணித்துள்ளார்.

நகர குடியிருப்பு அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் விஜித ஹேரத் மற்றும் அந்த நிறுவனத்தின் சிரேஷ்ட அதிகாரிகள் குழுவினரும் இந் நிகழ்வில் கலந்துகொண்டனர்.

Source: https://ibctamil.com/article/the-new-chairman-the-housing-development-authority-1729241147

NO COMMENTS

Exit mobile version