Home இலங்கை சமூகம் மறைந்த உண்மைகளின் மீள் தோற்றம்! செம்மணி அகழ்வின் அடுத்த பகுதி தொடங்குகிறது

மறைந்த உண்மைகளின் மீள் தோற்றம்! செம்மணி அகழ்வின் அடுத்த பகுதி தொடங்குகிறது

0

யாழ்ப்பாணம் – செம்மணி, சித்துப்பாத்தி மனித புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வின் இரண்டாவது பகுதிக்கான அகழ்வுப் பணிகள் திங்கட்கிழமை (21) ஆரம்பிக்கப்படவுள்ளன.

சட்ட வைத்திய அதிகாரி மற்றும் தொல்லியல் துறை பேராசிரியர் ராஜ் சோமதேவா ஆகியோரின் சமர்ப்பணங்களை ஆராய்ந்த யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றம், அகழ்விற்கான இந்த அனுமதியை வழங்கி உள்ளது.

இந்தநிலையில், இன்று முதல் எதிர்வரும் 15 நாட்களுக்கு மனித புதைகுழி அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

செம்மணி, சித்துப்பாத்தி மனித புதைகுழியின் இரண்டாம் கட்டத்தின், முதலாவது பகுதி அகழ்வுப் பணிகளின் போது 65 என்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டன.

அதன்படி, அரியாலை சித்துப்பாத்தி இந்து மயானத்தில் உள்ள செம்மணி மனித புதைகுழி அகழ்வில் முதலாவதாக கண்டுபிடிக்கப்பட்ட மனித புதைகுழியில் 63 எலும்புக்கூடுகளும் அதற்குப் பிறகு கண்டுபிடிக்கப்பட்ட மனித புதைகுழியில் இருந்து 2 எலும்புக்கூடுகளும் கண்டெடுக்கப்பட்டு மொத்தமாக 65 எலும்புக்கூடுகள் அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன.

இது குறித்த விரிவான தகவல்களுடன் வருகின்றது இன்றைய பத்திரிகை செய்தி….

https://www.youtube.com/embed/p3mrzW9VCL0

NO COMMENTS

Exit mobile version