Home இலங்கை சமூகம் உப்புக்கான அதிகபட்ச சில்லறை விலை குறித்து வெளியான அறிவிப்பு

உப்புக்கான அதிகபட்ச சில்லறை விலை குறித்து வெளியான அறிவிப்பு

0

உப்புக்கான அதிகபட்ச சில்லறை விலை இதுவரையிலும் நிர்ணயிக்கப்படவில்லை என நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.

உப்புக்கான அதிகபட்ச சில்லறை விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக சமூக ஊடகங்களில் செய்திகள் பரப்பப்படுகின்றன.

உண்மைக்கு புறம்பான செய்திகள்

இவ்வாறு பரப்பப்படும் செய்திகள் உண்மைக்கு புறம்பானவை என நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.

அத்துடன், நுகர்வோர் விவகார அதிகார சபைக்கும் உப்பு உற்பத்தியாளர்கள் சங்கத்துக்கும் இடையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றதாகவும் அதன் பின்னரே இவ்வாறு உப்புக்கான அதிகபட்ச சில்லறை விலை நிர்ணயிக்கப்பட்டதாகவும் அந்த செய்திகளில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், அவ்வாறான எந்தவொரு கலந்துரையாடலும் முன்னெடுக்கப்படவில்லை எனவும் நுகர்வோர் விவகார அதிகார சபை மேலும் குறிப்பிட்டுள்ளது. 

NO COMMENTS

Exit mobile version