கடந்த சில நாட்களாக அதீதமாக அதிகரித்து வந்த மலையக மரக்கறிகளின் விலை இன்று (08) குறைவடைந்துள்ளதாக சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
நாடு பூராகவும் மலையக மரக்கறிகளை விநியோகிக்கும் பிரதான பொருளாதார மத்திய நிலையமான கெப்பெட்டிபொல பொருளாதார மத்திய நிலையத்தின் அதிகளவான மரக்கறிகள் கிடைக்கப்பெற்றதன் காரணமாக விலைகள் வீழ்ச்சியடைந்துள்ளதாக வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, அனுராதபுரம் விளச்சிய பிரதேசத்தில் பூசணி செய்கை தோல்வியடைந்துள்ளதாக விவசாயிகள் கவலை வெளியிட்டுள்ளனர்.
மரக்கறி பயிர்கள் சேதம்
பூசணிக்காய்க்கு உரிய விலை கிடைக்காத நிலையில், உற்பத்திச் செலவைக் கூட பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
அத்துடன், தற்போது பெய்து வரும் கடும் மழை காரணமாக பண்டாரவளை பிரதேசத்தில் மரக்கறி பயிர்கள் சேதமடைந்துள்ளதாகவும் தெரவிக்கப்படுகிறது.
இது தொடர்பில் அதிகாரிகள் கவனம் செலுத்த வேண்டுமெனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.