Home சினிமா IBC தமிழ் தயாரித்துள்ள The Sixth Land திரைப்படம்

IBC தமிழ் தயாரித்துள்ள The Sixth Land திரைப்படம்

0

The Sixth Land

கடந்த 2009ம் ஆண்டு இலங்கையில் நடைபெற் ஈழத்து போர் பற்றி உலகமே அறிந்த ஒரு விஷயம்.

இந்த போர் முடிந்த பிறகு சிங்கள இராணுவத்திடம் ஆயிரக்கணக்கான மக்கள் சரணடைந்தனர். அதன்பிறகு அவர்கள் என்ன ஆனார்கள் என்பது தெரியவில்லை, சிங்கள அரசும் இதுவரை சரணடைந்தவர்களின் உண்மை நிலையை தெரிவிக்கவில்லை.

சரணடைந்தவர்களின் குடும்பங்கள் எப்படிபட்ட சூழலில் வாழ்கின்றனர் என்பதை இப்படம் உணர்த்துகிறது.

சிங்கள அரசிடம் சரணடைந்த கணவர் வருவார் என்ற நம்பிக்கையில் மனைவியும், அப்பா வருவாரா என்ற கேள்வியுடன் காத்திருக்கும் மகள் என இந்த இரண்டு கதாபாத்திரங்களை மையமாக கொண்டு உருவானது தான் The Sixth Land.

அனந்த ரமணன் இந்த படம் மூலம் ஒட்டுமொத்த தமிழ் ஈழ மக்களின் வலியை புரிய வைத்திருக்கிறார்.

NO COMMENTS

Exit mobile version