Home இலங்கை சமூகம் இன அழிப்பிற்கு எதிராக சர்வதேச நீதி கோரிய போராட்டம்: மன்னாரில் வீதிக்கிறங்கிய உறவுகள்

இன அழிப்பிற்கு எதிராக சர்வதேச நீதி கோரிய போராட்டம்: மன்னாரில் வீதிக்கிறங்கிய உறவுகள்

0

நீண்ட காலமாக தமிழ் மக்கள் மீது திட்டமிடப் பட்ட வகையில் நடாத்தப்பட்டு வரும் இன அழிப்பிற்கு சர்வதேச நீதி கோரிய போராட்டமானது வடக்கு கிழக்கு சமூக இயக்கத்தின் ஏற்பாட்டில் வடக்கு கிழக்கு எட்டு மாவட்டங்களிலும் இடம்பெற்றது.

இதன்படி மன்னாரின் நகரப்பகுதியில் குறித்த போராட்டம் இடம்பெற்றுள்ளது.

இன்று (26.07.2025) சனிக்கிழமை காலை 10.00 மணிக்கு ஒரே நேரத்தில் எட்டு மாவட்டங்களிலும் இடம்பெற்றது.

பன்னாட்டு சுதந்திர நீதிப் பொறி

இப்போராட்டத்தில் பாதிக்கப்பட்டவர்கள், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள், படுகொலை செய்யப்பபட்டவர்களின் உறவினர்கள், காணி மற்றும் வள சுரண்டைலுக்கு உள்ளான மக்கள், பெண்கள் வலையமைப்புக்கள், சிவில் அமைப்புக்கள், மனித உரிமை பாதுக்காவலர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

மேலும், தங்களுக்கு இழைக்கப்பட்ட இன அழிப்பிற்கு பன்னாட்டு சுதந்திர நீதிப் பொறி ஊடாக மட்டுமே எமக்கான நீதியை வேண்டுகிறோம் எனக் கேட்டுக்கொண்டனர்.

NO COMMENTS

Exit mobile version