Home இலங்கை சமூகம் இலங்கையில் நாளாந்தம் உயிரிழக்கும் ஏழுபேர்

இலங்கையில் நாளாந்தம் உயிரிழக்கும் ஏழுபேர்

0

இலங்கையில்(sri lanka) அதிகமானோர் மோட்டார் சைக்கிள்களால் ஏற்படும் வீதி விபத்துக்களினால் உயிரிழப்பதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

வீதி விபத்துக்களினால் நாளாந்தம் சுமார் 7 பேர் உயிரிழப்பதாக போக்குவரத்து பிரிவுக்கு பொறுப்பான பிரதி காவல்துறை மா அதிபர் இந்திக்க ஹப்புகொட தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட பிரதி காவல்துறை மா அதிபர் இந்திக்க ஹப்புகொட இதனை தெரிவித்துள்ளார்.

நாளொன்றுக்கு உயிரிழப்பவர்கள்

“இலங்கையில் வருடாந்தம் விபத்துக்களில் 12,000 பேர் இறக்கின்றனர். அவர்களில் நான்கில் ஒரு பகுதியினர் வீதி விபத்துக்கள். இலங்கையில் நாளொன்றுக்கு சுமார் 7 அல்லது 8 பேர் விபத்துக்களில் இறக்கின்றனர்.

அவர்களில் பெரும்பாலானோர் மோட்டார் சைக்கிள் ஓட்டுபவர்கள் மற்றும் பின்னால் பயணிப்பவர்கள். இலங்கையில் 18-28 வயதுடைய இளைஞர்கள்

குடிபோதையில் வாகனம்

2022 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 230 பேர் உயிரிழந்துள்ளனர்.

வீதி விபத்துக்கள் அதிகரிப்பதற்கு குடிபோதையில் வாகனம் செலுத்துவதே பிரதான காரணம் என பிரதி காவல்துறை மா அதிபர் இந்திக்க ஹப்புகொட தெரிவித்துள்ளார்.  

Source: https://ibctamil.com/article/the-tragedy-that-takes-7-lives-a-day-1719466550

NO COMMENTS

Exit mobile version