Home இலங்கை சமூகம் யாழ். தெல்லிப்பளை வைத்தியசாலையை மீட்டெடுப்போம் – அரச வைத்திய அதிகாரிகள் சங்கம்

யாழ். தெல்லிப்பளை வைத்தியசாலையை மீட்டெடுப்போம் – அரச வைத்திய அதிகாரிகள் சங்கம்

0

தெல்லிப்பளை வைத்தியசாலையை மீட்டெடுப்போம் என அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தெல்லிப்பளை கிளை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

இது தொடர்பில் அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தெல்லிப்பளை மண்ணின் புகழ் பூத்த எங்கள் வைத்தியசாலை போர் மற்றும்
இடப்பெயர்வுகளின் பின்னர் 2012 ஆம் ஆண்டிலிருந்து புதிய இடத்தில் இயங்கத்
தொடங்கியது.

குறுகிய காலத்தில் துரித வளர்ச்சி அடைந்து யாழ் போதனா
வைத்தியசாலைக்கு அடுத்ததாக வட மாகாண மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்கின்ற
வைத்தியசாலையாகத் தன்னைத் தரமுயர்த்தி மிடுக்கோடு விளங்குகின்றது.

விசேட
பிரிவுகளாக மனநல மருத்துவப் பிரிவு மற்றும் புற்றுநோய்ப் பிரிவுகளைத்
தன்னகத்தே கொண்டு அளப்பெரும் மருத்துவப் பணியை ஆற்றி வரும் மகத்தான
வைத்தியசாலையாகக் காணப்படுகின்றது.

பொறுப்பற்ற செயற்பாடுகள்

ஆனால் கடந்த இரண்டு வருடங்களாக வினைத் திறனற்ற வைத்தியசாலை நிர்வாகியின்
பொறுப்பற்ற செயற்பாடுகள் காரணமாக அது பல்வேறு நிர்வாகச் சிக்கல்களைச்
சந்தித்து வருகின்றது.

அத்துடன் வைத்தியசாலை ஊழியர்களின் பாதுகாப்பற்ற
நிலைக்கும் தற்போதைய நிர்வாகம் இட்டுச் செல்கின்றது . இது தொடர்பாக மாகாண
மற்றும் மத்திய சுகாதார உயர் மட்டங்களுக்குத் தெரியப்படுத்தி இருந்தோம்.

ஆனால், இன்று வரை ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படவில்லை.
வைத்தியசாலையின் இந்த விரும்பத்தகாத நிலைமை பற்றி மக்களுக்கு விழிப்புணர்வு
ஏற்படுத்துவதற்காக அண்மையில் நாங்கள் அடையாள பணிப் பகிஷ்கரிப்புப்
போராட்டம் ஒன்றையும் நடாத்தியிருந்தோம்” என குறிப்பிட்டுள்ளனர். 

NO COMMENTS

Exit mobile version