Home இலங்கை பொருளாதாரம் வாகன இறக்குமதியில் குறைவு இல்லை.. வெளியான தகவல்

வாகன இறக்குமதியில் குறைவு இல்லை.. வெளியான தகவல்

0

சுங்க வரி விகிதங்களை அதிகரிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருந்த போதிலும், நாட்டிற்குள் வாகனங்களின் இறக்குமதி எதிர்பார்த்த அளவிற்கு கட்டுப்படுத்தப்படவில்லை என்று தெரியவந்துள்ளது.

சுங்கத் திணைக்களத்தின் சிரேஷ்ட பணிப்பாளரும், சுங்கத் திணைக்கள ஊடகப் பேச்சாளருமான சந்தன புஞ்சிஹேவா, ஊடக சந்திப்பொன்றில் பங்கேற்றபோது அது குறித்து தெரிவித்துள்ளார்.

நிதிக் கொள்கை

மேலும் கருத்து தெரிவித்த அவர்,

அமெரிக்க டொலரின் மதிப்பு உயர்வால் ஏற்படும் பொருளாதார அழுத்தத்தைக் குறைக்கும் நோக்கில் இந்த வரி திருத்தம் செய்யப்பட்டிருந்தாலும், இறக்குமதிக் கட்டுப்பாடுகள் தொடர்பான எதிர்பார்ப்புகள் அந்த அளவிற்கு நிறைவேறவில்லை.

சந்தையில் நிலவும் கடுமையான அழுத்தத்தைக் கட்டுப்படுத்துவதும், டொலருக்கான தேவையைக் குறைப்பதும் சுங்க வரிகளை அதிகரிப்பதற்கான முக்கிய காரணமாக அரசாங்கத்தால் முன்னர் முன்வைக்கப்பட்டிருந்தது.

இருப்பினும், சுங்கத் திணைக்கள அவதானிப்புகளின்படி, தொடர்புடைய நிதிக் கொள்கையிலிருந்து எதிர்பார்க்கப்பட்ட உண்மையான முடிவுகள் இன்னும் முழுமையாக எட்டப்படவில்லை என்று தெரிகிறது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 6 Evening

Source: https://tamilwin.com/article/there-is-no-decrease-vehicle-imports-1780766487

NO COMMENTS

Exit mobile version