Home இலங்கை சமூகம் வீட்டை உடைத்து பெறுமதிமிக்க ரத்தினக் கற்கள் கொள்ளை: இருவர் கைது

வீட்டை உடைத்து பெறுமதிமிக்க ரத்தினக் கற்கள் கொள்ளை: இருவர் கைது

0

பேருவளை பகுதியில் வீடுகளுக்குள் புகுந்து பெறுமதி மிக்க சொத்துக்களைத் திருடியதற்காகவும், திருடப்பட்ட பொருட்களை வைத்திருந்ததற்காகவும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த 5 ஆம் திகதி வீட்டை உடைத்து சுமார் 30 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள ரத்தினக் கற்கள் திருடப்பட்டதாக பேருவளை காவல்துறையினருக்கு முறைப்பாடடொன்று கிடைத்துள்ளது.

அதனைதொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், வீடுகளை உடைத்து சொத்துக்களைத் திருடிய ஹெட்டிமுல்லவைச் சேர்ந்த 41 வயதுடைய சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலதிக விசாரணை

அத்துடன், சந்தேக நபர் திருடப்பட்ட ரத்தினக் கற்களை விற்பனைக்காக பேருவளைப் பகுதியைச் சேர்ந்த மற்றுமொருவருகு்கு கொடுத்திருந்துள்ளார்.

அதன்படி, திருடப்பட்ட பொருட்களை வைத்திருந்ததற்காக பல்வேறு அளவிலான 106 ரத்தினக் கற்களுடன் அந்த சந்தேகநபரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த நிலையில், சம்பவம் குறித்து பேருவளை காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

NO COMMENTS

Exit mobile version