Home இந்தியா மோடியின் இலங்கை விஜயமும், விலகாத மர்மங்களும்.. நடந்தது என்ன?

மோடியின் இலங்கை விஜயமும், விலகாத மர்மங்களும்.. நடந்தது என்ன?

0

இந்தியப் பிரதமரின் இலங்கை விஜயம் இடம்பெறுவதற்கு முன்னைய நாளில் இருந்து இலங்கையின் தலைநகர் கொழும்பு கிட்டத்தட்ட இந்தியப் பாதுகாப்புப்படையின் முழுக் கட்டுப்பாட்டுக்குள் வந்துவிட்டதாகவே கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தியாவில் இருந்து சிறப்பு உலங்கு வானூர்திகளில் வந்திறங்கிய இந்தியச்சிறப்பு பாதுகாப்பு பிரிவு அதிகாரிகள், மோடியின் பயணம் இடம்பெற்ற பிரதேசங்கள் அத்தனையையும் தமது முழுமையான கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்திருந்தார்கள்.

மோடி இலங்கையில் இருந்த இந்த இரண்டு நாட்களுமே, இலங்கையின் வான்பரப்புக் கூட இந்தியப் படையின் கட்டுப்பாட்டினுள் இருந்ததாக கொழும்பு ஊடகங்கள் கூறுகின்றன.

இந்திப் பிரதமர் இலங்கைக்கு வருகைதந்திருந்த அதேநேரம், இந்தியப் போர்க்கப்பலான INS Sahyadri , 320 கடற்படை வீரர்களுடன் இலங்கைக்கு வருகை தந்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.

இந்த விடயங்கள் பற்றி ஆராய்கின்றது இந்த ‘உண்மையின் தரிசனம்’ நிகழ்ச்சி:

 

https://www.youtube.com/embed/4MpbckRE6m8

NO COMMENTS

Exit mobile version