1990 ஓகஸ்ட் மாதம் 6ஆம் திகதி இடம்பெற்ற
திராய்க்கேணி படுகொலை சம்பவத்தின் 35ஆவது வருட நினைவேந்தல் திராய்க்கேணி
எழுச்சி ஒன்றியம் ஏற்பாட்டில் சம்பவம் இடம்பெற்ற திராய்க்கேணி ஸ்ரீ
முத்துமாரியம்மன் கோவில் முன்றலில் நடத்தப்பட்டது.
இதன்போது பாதிக்கப்பட்ட மக்கள், “செம்மணி போன்று
திராய்க்கேணியிலும் மனிதப்புதைகுழி உள்ளது. அதுவும் தோண்டப்படவேண்டும்.
அட்டாளச்சேனை கிழக்கு மாகாணம் பிரதேச கிராமத்தில் 1990 ஆம் ஆண்டு ஆகஸ்ட்
மாதத்தின் ஆறாம் திகதி நன்கு திட்டமிடப்பட்ட வகையில் அரங்கேற்றப்பட்ட
இனப்படுகொலை இன்றும் அந்த மக்களினுடைய இருப்பை கேள்விக்கு உள்ளாக்கி வருகிறது.
அம்பாறை மாவட்டத்தின் அட்டாளச்சேனை பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்திருக்கின்ற
ஒரே ஒரு தமிழ் கிராமம் திராய்கேணியாகும் தமிழர் பண்பாடு மிகுந்த வரலாற்றுச்
சிறப்புமிக்க கிராமமாகும்” என குறிப்பிட்டுள்ளனர்.
மேலும் அவர்கள் கூறுகையில்,
