Home இலங்கை கல்வி பாடசாலை மூன்றாம் தவணை இன்றுஆரம்பம்

பாடசாலை மூன்றாம் தவணை இன்றுஆரம்பம்

0

2025ஆம் ஆண்டின் அரச பாடசாலைகள் மற்றும் அரச அனுமதி பெற்ற தனியார் பாடசாலைகளில் சிங்களம் மற்றும் தமிழ் பாடசாலைகளுக்கான இரண்டாவது பாடசாலைத் தவணை கடந்த 7 ஆம் திகதி நிறைவடைந்தது.

 இதன்படி, குறித்த பாடசாலைகளின் 3 ஆம் தவணை கற்றல் நடவடிக்கைகள் இன்று (18) ஆரம்பமாகும் என கல்வியமைச்சு அறிவித்துள்ளது.

மூன்றாம் தவணை கல்வி நடவடிக்கைகள்

இதேவேளை, முஸ்லிம் பாடசாலைகளுக்கான மூன்றாம் தவணை கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் 25 ஆம் திகதி திங்கட்கிழமை ஆரம்பிக்கப்படும்.

இதனிடையே எதிர்வரும் நவம்பர் 10 ஆம் திகதி உயர்தர பரீட்சை ஆரம்பமாகுமென பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Source: https://ibctamil.com/article/third-school-term-begin-tomorrow-1755455811

NO COMMENTS

Exit mobile version