Home இலங்கை சமூகம் போக்குவரத்து பொலிஸ் அதிகாரிகளுக்கு பதின்மூன்று வருடங்களுக்கு பின்னர் அதிகரிக்கப்பட்டுள்ள உதவித்தொகை!

போக்குவரத்து பொலிஸ் அதிகாரிகளுக்கு பதின்மூன்று வருடங்களுக்கு பின்னர் அதிகரிக்கப்பட்டுள்ள உதவித்தொகை!

0

பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் வெளியிட்ட விசேட சுற்றறிக்கையின் ஊடாக போக்குவரத்து பொலிஸ் அதிகாரிகளுக்கான உதவித்தொகை அதிகரிக்கப்பட்டுள்ளன.

போக்குவரத்து பொலிஸ் அதிகாரிகளின் பணி

பதின்மூன்று வருடங்களின் பின்னர் போக்குவரத்து பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு வழங்கப்பட்டு வந்த உதவித்தொகையை அதிகரித்து அதனை மாதாந்தம் செலுத்துமாறு பொலிஸ்மா அதிபர் விசேட சுற்றறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார்.  

பொதுமக்கள் மற்றும் வாகன சாரதிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக, சாலைகளில் நீண்ட நேரம் காத்திருப்பது போன்ற போக்குவரத்து பொலிஸ் அதிகாரிகளின் அலுப்பான பணியை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

போக்குவரத்து பொலிஸ் அதிகாரிகளின் அலுப்பான பணியை பாராட்டவும், அவர்களின் நலனை மேம்படுத்தவும் உதவித்தொகை அதிகரிக்கப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உதவித்தொகை விபரங்கள்

அதன்படி, இதுவரை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி/போக்குவரத்து பதவியை வகித்த அதிகாரி ஒருவருக்கு வழங்கப்படும் மாதாந்த உதவித்தொகை 2,500 ரூபாவில் இருந்த 7,000 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

இன்ஸ்பெக்டர் அந்தஸ்தில் உள்ள அதிகாரிகள் தற்போது 2,000 ரூபாய் முதல் 7,000 ரூபாய் வரையில் பெற்றுக்கொள்கின்றனர்.

பொலிஸ் சார்ஜன்ட் ஒருவருக்கான உதவித்தொகை 1,800 ரூபாவிலிருந்து 6000 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளதுடன் பொலிஸ் கான்ஸ்டபிளுக்கான உதவித்தொகை 1,600 ரூபாயிலிருந்து 6,000 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.  

NO COMMENTS

Exit mobile version