Home இலங்கை சமூகம் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்த திருமாவளவன்

யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்த திருமாவளவன்

0

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் நேற்று யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.

நேற்றைய தினம், யாழ்ப்பாணம் விமான நிலையத்தின் ஊடாக சென்ற அவரை தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ.ஐங்கரநேசன் வரவேற்றுள்ளார். 

மலர்க் கண்காட்சி 

தமிழ்த் தேசியப் பசுமை இயக்கம் வடமாகாண மரநடுகை மாதத்தை முன்னிட்டு
நடாத்துகின்ற ‘கார்த்திகை வாசம்’ மலர்க்கண்காட்சி நல்லூர் கிட்டு பூங்காவில்
(சங்கிலியன் பூங்கா) இன்று (14.11.2025) பிற்பகல் 3.00 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

இத்தொடக்க விழாவில் கௌரவ விருந்தினராகக் கலந்து கொள்வதற்காக தொல்.திருமாவளவன் யாழிற்கு சென்றுள்ளார். 

அத்தோடு தொல்.திருமாவளவன் நேற்று முள்ளிவாய்க்காலுக்கும் சென்று அஞ்சலி
செலுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version