Home இலங்கை சமூகம் கம்பளையில் பிரதேச சபை உறுப்பினருக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட பாடசாலை சமூகத்தினர்

கம்பளையில் பிரதேச சபை உறுப்பினருக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட பாடசாலை சமூகத்தினர்

0

கம்பளை கல்வி வலயத்திற்கு சேர்ந்த க/தொளஸ்பாகே தமிழ் வித்தியாலய சமூகத்தினர் இணைந்து கவனயீர்ப்பு போராட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர்.

குறித்த போராட்டமானது இன்றையதினம்(30) முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்த  பாடசாலைக்கு சொந்தமான காணியினை தனது காணி என அரசியல் கட்சியினுடைய பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் உரிமை கொண்டதற்கு எதிராக இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

போராட்டம்

அத்தோடு, குறித்த நபர் பாடசாலையின் கதவினை உடைத்து முரண்பாட்டில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதனையடுத்து, இந்த விடயம் தொடர்பில் பொலிஸில் முறையிட்டும் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என குறிப்பிடப்படுகின்றது.

மேலும், இந்த விடயம் தொடர்பில் வழக்கு பதிவு செய்த போதும் பொலிஸார் நீதிமன்றில் உரிய ஆவணங்களை சமர்ப்பிக்காததால் வழக்கு தள்ளுபடியாகி உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

NO COMMENTS

Exit mobile version