Home இலங்கை சமூகம் ஆயிரக்கணக்கான பக்தர்கள் புடைசூழ தேரிலே காட்சியளிக்கும் செல்வச்சந்நிதியான்

ஆயிரக்கணக்கான பக்தர்கள் புடைசூழ தேரிலே காட்சியளிக்கும் செல்வச்சந்நிதியான்

0

ஈழத்தின் பிரசித்தி பெற்ற ஆலயங்களில் ஒன்றான யாழ்ப்பாணம் – வடமராட்சி தொண்டைமானாறு செல்வச்சந்நிதி முருகன் ஆலய வருடாந்த
உற்சவத்தின் தேர் திருவிழா இன்றாகும்.

அன்னதானக் கந்தன் என போற்றப்படும் முருகப்பெருமான் ஆயிரக்கணக்கான பக்தர்கள் புடைசூழ தேரிலே ஏறிக் காட்சியளிக்கின்றார்.

இன்றைய தேர் திருவிழாவின் போது ஏராளமான பக்த அடியார்கள் கலந்துகொண்டு தமது நேர்த்திக் கடன்களை நிறைவேற்றுகின்றனர்.

கடந்த 23 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமான வருடாந்த திருவிழா எதிர்வரும் 07ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

இந்த நிலையில் நேற்றிரவு சப்பறத் திருவிழா இடம்பெற்ற நிலையில் இன்று காலை தேர் திருவிழாவும், நாளை காலை தீர்த்தத் திருவிழாவும் மாலை 6 மணிக்கு மௌனத் திருவிழாவும் இடம்பெறவுள்ளன.

https://www.youtube.com/embed/Z8IybP4XKSs

NO COMMENTS

Exit mobile version