Home இலங்கை சமூகம் 30 வருடங்களுக்கு மேலாக மீள்குடியேறாமல் தவிக்கும் மக்கள் : முன்னெடுக்கப்பட்ட கலந்துரையாடல்

30 வருடங்களுக்கு மேலாக மீள்குடியேறாமல் தவிக்கும் மக்கள் : முன்னெடுக்கப்பட்ட கலந்துரையாடல்

0

கிளிநாச்சி (Kilinochchi)- பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதியில் 30 வருடங்களுக்கு மேலாக மீள்குடியேற முடியாமல் இருக்கும் மக்கள் தொடர்பில் ஆராயும் கலந்துரையாடல் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

குறித்த கலந்துரையாடல் கிளிநாச்சி மாவட்ட அரச அதிபர் தலைமையில் நேற்று (30-01-2025) முகமாலை பொதுநோக்கு மண்டபத்தில் நடைபெற்றது.

இதன்போது முகமாலை, இத்தாவில், வேம்பெடுகேணி போன்ற பகுதிகளில் இடம் பெயர்ந்த மக்களினுடைய மீள்குடியேற்றம்
மற்றும் ஏற்கனவே மீள்குடியேறிய மக்களினுடைய தேவைப்பாடுகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.

யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்தோர்

மேற்குறித்த பகுதிகளில் உள்ள மக்கள் கடந்த
1996ஆம் ஆண்டு ஏற்பட்ட யுத்தம் காரணமாக முழுமையாக இடம்பெயர்ந்து இன்றுவரை
மீள் குடியமர முடியாத நிலையில் பல்வேறு இடங்களிலும் வாழ்ந்து வருகின்றதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வாறு 30 வருடங்களுக்கு மேலாக இடம்பெயர்ந்த குடும்பங்களில் இதுவரை 30
குடும்பங்கள் தமது சொந்த இடங்களில் மீள் குடியேறவும் 60 வரையான குடும்பங்கள்
தங்களுடைய காணிகளை பராமரிப்பதற்கும் பிரதேச செயலகத்தின் ஊடாக பதிவுகளை
மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version