Home இலங்கை பொருளாதாரம் வாகன இறக்குமதியால் ஏற்பட்டுள்ள சிக்கல் – ஆயிரத்திற்கு மேற்பட்ட வாகனங்களுக்கு பாதிப்பு

வாகன இறக்குமதியால் ஏற்பட்டுள்ள சிக்கல் – ஆயிரத்திற்கு மேற்பட்ட வாகனங்களுக்கு பாதிப்பு

0

இறக்குமதி செய்யப்பட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் இன்னும் துறைமுகங்களில் சிக்கியிருப்பதாக தெரியவந்துள்ளது.

அவற்றை விடுவிக்க அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்ட போதிலும், அதற்கு உரிய பதிலும் கிடைக்கவில்லை என்று வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் சம்பத் மெரெஞ்சிகே தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் ஜனாதிபதியுடன் கலந்துரையாடல் நடத்துமாறு கோரிய போதிலும், இன்னும் வாய்ப்பு கிடைக்கவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

வாகன இறக்குமதி

இந்த வாகனங்களை விடுவிக்காமல் கொழும்பு மற்றும் ஹம்பாந்தோட்டை துறைமுகங்களில் வைத்திருப்பதால், தாமத கட்டணங்களை இறக்குமதியாளர்கள் செலுத்த வேண்டியிருக்கும்.

ஹம்பாந்தோட்டை துறைமுகம் வேறொரு நாட்டிற்குச் சொந்தமானது என்பதால், செலுத்தப்படும் தாமதக் கட்டணங்கள் அந்த நாடுகளுக்கு டொலர்களில் மாற்றப்படுகின்றன .

கொழும்பு துறைமுகத்தில் உள்ள பெரும்பாலான வாகன நிறுத்துமிடங்களும் தனியார் துறையை சேர்ந்தவை என்பதால், அந்த தாமதக் கட்டணங்களும் அவர்களுக்கு செல்வதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

டொலர் வருமானம்

ஹம்பாந்தோட்டை மற்றும் கொழும்பு துறைமுகங்களில் சுமார் இரண்டு மாதங்களாக சுமார் 1000 வாகனங்களை விடுவிக்க முடியவில்லை. அதற்கு முன்பு இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்கள் விடுவிக்கப்பட்டுள்ளன.

வாகன இறக்குமதிக்காக ஒரு பில்லியன் டொலர்களை செலவிட்ட பின்னர் 1.7 பில்லியன் டொலர் வருமானத்தை அரசாங்கம் எதிர்பார்ப்பதாக சங்கத்தின் செயலாளர் பிரசாத் குலதுங்க தெரிவித்துள்ளார்.

NO COMMENTS

Exit mobile version