Home இலங்கை சமூகம் யாழில் பிரபல கால்பந்தாட்ட வீரரின் இறுதிச் சடங்கில் குவிந்த ஆயிரக்கணக்கான இளைஞர்கள்

யாழில் பிரபல கால்பந்தாட்ட வீரரின் இறுதிச் சடங்கில் குவிந்த ஆயிரக்கணக்கான இளைஞர்கள்

0

யாழில் (Jaffna) ஆயிரக்கணக்கான இளைஞர்கள் மத்தியில் பிரபல கால்பந்தாட்ட வீரரின் இறுதி சடங்கு முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கடந்த 13 ஆம் திகதி செம்மணி பகுதியில் இடம்பெற்ற கோர விபத்தில் சிக்கி கால்பந்தாட்ட வீரர் ஒருவர் உயிரிழந்தார்.

வடமராட்சி கிழக்கை சேர்ந்த யூட் மெரின் என்பவரே இவ்வாறு விபத்தில் சிக்கி உயிரிழந்திருந்தார்.

இறுதி சடங்கு

இந்தநிலையில், அவரின் பூத உடல் அவரின் வீட்டில்
இருந்து எடுத்து வரப்பட்டு உடுத்துறை செந்தமிழ் விளையாட்டு மைதானத்தில் இறுதி
சடங்கான பொது மக்கள் உறவினர்கள் நண்பர்களுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக
வைக்கப்பட்டுள்ளது.

செந்தமிழ் விளையாட்டு மைதானத்தில்
இறுதிக்கோல் அடிக்கப்பட்டு மோட்டார் வாகன பவணியுடன் தாழையடி புனித அந்தோனியார்
ஆலயத்திற்கு இரங்கல் திருப்பலிக்காக கொண்டு சென்று இரங்கல் திருப்பலியினை
செம்பியன் பற்று பங்கு தந்தை ஜஸ்டின் ஆதர் ஒப்புக்கொடுத்தார்.

பொதுமக்கள் 

இதையடுத்து, தாழையடி புனித அந்தோனியார் ஆலய சேமக்காலையில் அவரின்
பூத உடல் அடக்கம் செய்யப்பட்டுள்ளது.

இவ் இறுதி சடங்கு நிகழ்வில் ஜனநாயக போராளிகள் கட்சி தலைவர் வேந்தன், நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் மற்றும் இலங்கை முழுவதும்
இருந்து பிரபல கால்பந்தாட்ட வீரர்கள், வீராங்கனைகள், இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் என
பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version