Home உலகம் காசாவில் தொடரும் பதற்றம்! ஜபாலியா முகாமில் சிக்கி கொண்டுள்ள ஆயிரக்கணக்கான மக்கள்

காசாவில் தொடரும் பதற்றம்! ஜபாலியா முகாமில் சிக்கி கொண்டுள்ள ஆயிரக்கணக்கான மக்கள்

0

காசாவில் இஸ்ரேல் படைகளின் தாக்குதல் தீவிரமடைந்தியிருக்கும் நிலையில் ஜபாலியா முகாம் அமைந்துள்ள பகுதியில் ஆயிரக்கணக்கான மக்கள் சிக்கியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஹமாஸ் படைகள் மீண்டும் ஒருங்கிணைவதை தடுக்கும் நோக்கமாகக் கொண்ட இஸ்ரேல் உக்கிரமான தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது.

இதன்போது, இஸ்ரேலிய ராணுவம் முன்னெடுத்துவரும் தாக்குதல்களால் கடந்த வெள்ளிக்கிழமை(11) குறைந்தது 20 பாலஸ்தீனியர்கள் ஜபாலியாவில் கொல்லப்பட்டுள்ளதுடன் பலர் காயங்களுடன் தப்பியுள்ளனர்.

கொல்லப்பட்டவர்கள் ஹமாஸ் அமைப்பினர்

எனினும், இறப்பு எண்ணிக்கை அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.

இதேவேளை, கடந்த வெள்ளிக்கிழமை காசா பகுதியில் இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலில் குறைந்தது 61 பாலஸ்தீனியர்கள் வரை கொல்லப்பட்டுள்ளனர்.

இருப்பினும், ஜபாலியாவில் கொல்லப்பட்டவர்கள் ஹமாஸ் அமைப்பினர் என்றே இஸ்ரேல் குறிப்பிட்டுள்ளது.

அத்துடன், இறந்தவர்களில் எத்தனை பேர் ஹமாஸ் படையை சேர்ந்தவர்கள் அல்லது பொதுமக்கள் என்பது தொடர்பில் தெளிவான தகவல் வெளியாகவில்லை.

சிக்கியுள்ள பொதுமக்கள்

இந்த நிலையில், ஜபாலியா முகாம்களில் இருந்து எவரையும் வெளியேற இஸ்ரேல் ராணுவம் அனுமதிப்பதில்லை என்றும், வெளியேற முயற்சிப்பவர்கள் கொல்லப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், ஐக்கிய நாடுகள் சபை வெளியிட்டுள்ள தகவலின் அடிப்படையில் ஜபாலியா முகாம் பகுதியில் 400,000 மக்கள் வரை சிக்கியுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. 

NO COMMENTS

Exit mobile version