Home இலங்கை குற்றம் 11 பேருக்கு கொலை அச்சுறுத்தல்.. புலனாய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்

11 பேருக்கு கொலை அச்சுறுத்தல்.. புலனாய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்

0

தென் மாகாணத்தின் கந்தர பொலிஸ் பகுதியில் 11 பேருக்கு கொலை அச்சுறுத்தல் இருப்பதாக புலனாய்வு தகவல்கள் கிடைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கந்தர பொலிஸ் வட்டாரத்தில் 72 மணித்தியாலத்திற்குள் துப்பாக்கிச் சூடு நடத்தப்படும் என நம்பகமான புலனாய்வுத் தகவல்களை சுட்டிக்காட்டிய கந்தர பொலிஸார் உயிர் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ள சிலருக்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். 

கந்தர பகுதியில் இருக்கும் தெய்பாலே என்ற திட்டமிடப்பட்ட குற்றச் செயல்கள் மற்றும் போதை பொருள் கடத்தல்காரினாலே கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

பொலிஸாரின் எச்சரிக்கை

இப்போது இவர் டுபாயில் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. தென் பகுதியில் பாரிய அளவில் கைப்பற்றப்பட்ட போதை பொருட்கள் அவர் அனுப்பியதாகவே பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சிலருக்கு வெளியில் செல்ல வேண்டாம் எனவும் கந்தர பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நெவுந்தர தேவாலயத்திற்கு முன் கடந்த ஏழு மாதங்களுக்கு முன் இருவர் சுட்டுக் கொள்ளப்படுவதை அடுத்தே கந்தர பகுதியில் பெரும் பதற்றம் ஏற்படுகிறது.

அதில் கொல்லப்பட்ட யோமேஸ் என்பவரின் அண்ணன் கடந்த 12ஆம் திகதி அங்குனுகொலபெலஸ்ஸ அதி பாதுகாப்பு சிறைச்சாலையில் கழுத்து வெட்டி கொலை செய்ய முயற்சித்த போது தப்பித்த நிலையில் தங்காலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

 கொலை முயற்சி 

அவரின் பொற்றோர்களும் ஊடகங்களில் இச்சம்பவம் தொடர்பில் தொடர்பில் நேற்று முன்தினம் (13.11.2025) தெரிவித்துள்ள கருத்து,  அங்குனுகொலபெலஸ்ஸ சிறையில் கொலை செய்ய முயற்சித்தவர் எங்களின் மூத்த மகன். கொல்லப்பட்டவர் எனது இரண்டாவது மகன். இன்னொரு மகனும் இருக்கிறார்.

எங்களின் குடும்பத்தில் ஒரு ஆண்களையாவது உயிருடன் விட மாட்டேன் என்று சிறையில் இருக்கும் தெய்பாலேவின் தம்பி, தனது மகனிடம் கூறியதாக தெரிவித்துள்ளார்.

சிறையில் காலையில் பாண் ஒரு துண்டை சாப்பிட எடுக்கும் போது இருவர் மகனை நோக்கி ஓடி வந்துள்ளனர். ஆனால் அவர் அதை கவனத்தில் கொள்ளவில்லை.

அச்சந்தர்ப்பத்தில் ஒருவர் தன்னை பிடித்து கொண்ட போது மற்றவர் கழுத்தை வெட்டவே முயற்சித்துள்ளார். இவர் எப்படியோ தப்பியுள்ளார். உணவு தட்டை மடக்கி கத்தியாக பயன்படுத்தியே குத்தியுள்ளனர்.

15,000 ரூபா பெறுமதியான போதை பொருளுக்கே கொலை முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இப்போது பொலிஸார் எங்களை வெளியில் கூட செல்ல வேண்டாம் என்று சொல்லியுள்ளனர்” என்றனர். 

NO COMMENTS

Exit mobile version