Home இலங்கை சமூகம் நீதிமன்ற வாசலிலேயே ஊடகவியலாளருக்கு அச்சுறுத்தல்! அநாகரீகமாக செயற்பட்ட அதிகாரி

நீதிமன்ற வாசலிலேயே ஊடகவியலாளருக்கு அச்சுறுத்தல்! அநாகரீகமாக செயற்பட்ட அதிகாரி

0

இந்திய கடற்றொழிலாளர்களை நீதிமன்றத்தின் வெளியே இருந்து காணொளி எடுத்த ஊடகவியலாளர் மு.மதிவாணன் அச்சுறுத்தலுக்குள்ளாக்கப்பட்டுள்ளார்.

நீதிமன்றத்தின் வெளியில் இருந்து செய்தி சேகரித்துக்கொண்டிருந்த ஊடகவியலாளரை யாழ்ப்பாணம் சிறைச்சாலை அதிகாரி தடுத்து அச்சுறுத்தல் விடுத்துள்ளார்.

தட்டிவிடப்பட்ட கமரா

உமக்கு எதிராக வழக்குப் போடுவன் என்று அச்சுறுத்தி செய்தி சேகரிக்க முனைந்த போது கமராவை தட்டிவிட்டு செய்தி சேகரிக்க விடாது தடுத்து அவர் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளார்.

ஆனாலும் ஊடகவியலாளர் தனது செய்தி சேகரிக்கும் உரிமையை எடுத்துரைத்த நிலையில், ஊடகவியலாளர் அடையாள அட்டையை காண்பிக்குமாறு வற்புறுத்தி உறுதிபடுத்திய பின்னர் சம்பந்தப்பட்ட அதிகாரி அமைதியாக திரும்பி சென்றுள்ளார்.

NO COMMENTS

Exit mobile version