Home இலங்கை சமூகம் யாழில் வீடு புகுந்து கொலை முயற்சி…! காவல்துறை அசமந்தமா??

யாழில் வீடு புகுந்து கொலை முயற்சி…! காவல்துறை அசமந்தமா??

0

யாழில் மது போதையில் வீடொன்றில் உள்நுழைந்து நபர் ஒருவரால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் நேற்று  (31.10.2024) யாழ். வடமராட்சி கிழக்கு கட்டைக்காட்டில் இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, வீட்டில் இருந்த வேளை மதுபோதையில் அத்துமீறி உள்நுழைந்து தாக்குதல் நடத்த முயற்சித்ததுடன் குடும்பஸ்தரின் மனைவி, பிள்ளைக்கும் கத்தியால் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

மோட்டார் சைக்கிளின் மீது தாக்குதல் 

அத்துடன், வீட்டிற்கு வெளியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த குறித்த குடும்பஸ்தரின் மோட்டார் சைக்கிளின் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பாக மருதங்கேணி காவல் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்ட குடும்பஸ்தர் தெரிவித்துள்ளார்.

தனது மனைவி, பிள்ளை மீது கொலை முயற்சியில் ஈடுபட முயன்ற நபர் இறுதியாக மோட்டார் சைக்கிள் மீது கத்தியால் தாக்குதல் நடத்தி விட்டுச் சென்றது ஒரு வித அச்சத்தை ஏற்படுத்துவதாக தெரிவித்துள்ளார்.

சம்பவத்துடன் தொடர்புடைய நபர் கைது செய்யப்படாமல் மதுபோதையில் மீண்டும் அச்சுறுத்துவதால் உடனடியாக அவரை கைது செய்யுமாறு காவல்துறையினரை கேட்டுக் கொண்டுள்ளார்.

https://www.youtube.com/embed/_jCwjs0FFBU

NO COMMENTS

Exit mobile version