Home இலங்கை சமூகம் கரைதுறைப்பற்று பிரதேச சபைத் தவிசாளர் உறுப்பினர்களுக்கு மிரட்டல்

கரைதுறைப்பற்று பிரதேச சபைத் தவிசாளர் உறுப்பினர்களுக்கு மிரட்டல்

0

முல்லைத்தீவு கரைதுறைப்பற்று பிரதேச சபையின் தபிசாளர் உறுப்பினர்களுக்கு
மிரட்டும் வகையில் கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.

மிரட்டும் வகையில் கதைக்கப்பட்ட குரல் பதிவில்,  தபிசாளருக்கு முழு அதிகாரம்
உள்ளது.

 கடும் தொணியில் மிரட்டல்

நிறுவன தலைவர் என்ற அடிப்படையில் எந்த வட்டாரத்தில் எங்கு வேலை நடைபெற
வேண்டும் என்பதை நான் தான் முடிவு செய்வதாகவும், நீங்கள் சின்னப்பிள்ளைத்தனமாக
சேறு பூசும் அரசியலை செய்வீர்களானால், நீங்கள் அனைவரும் காணாமல் போய்
விடுவீர்கள் என கரைதுறைப்பற்று பிரதேச சபையின் தவிசாளர் சின்னராசா லோகேஸ்வரன்
சபை உறுப்பினர்களிடம் கடும் தொணியில் மிரட்டியதாக உறுப்பினர்கள் ஊடகங்களுக்கு  நேற்றையதினம் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு மிரட்டும் விதமாக கூறிய அவரது உரையைக் கொண்ட  குரல் பதிவும் தற்போது
வெளியாகியுள்ளது.

தற்போது நிலவும் மோசமான காலநிலையால் மக்கள் போக்குவரத்து, உணவு, குடிநீர்
உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளில் சிரமங்களை எதிர்கொண்டு வரும் சூழலில், பிரதேச
சபைத் தபிசாளரின் இத்தகைய கருத்துக்கள் உறுப்பினர்களிடையே பெரும் அச்சத்தை
ஏற்படுத்தியுள்ளது.

எங்கள் பாதுகாப்பு, நலன் தொடர்பாக தவிசாளர் தன்னிச்சையான அதிகாரப்
பயன்பாட்டின் அடிப்படையில் எங்களை அச்சுறுத்துவது ஏற்க முடியாதது என சில
உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.

NO COMMENTS

Exit mobile version